பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் கான்கும்

இழுக்கா இயன்றது அறம். (ப-ரை அழுக்காறு-பொறாமைக் குணம், அவா.ஆசை :பும், வெகுளி - சினமும், இன்னா - கடுமையான, சொல் . சொல்லும், ஆகிய நான்கும் நான்கும், இழுக்கா-விலக்கப் பட்டு, இயன்றது அறம் - நடைபெறுவதே அறம் என்பதாகும்.

(க-ரை பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நான்கும் விலக்கப்பட்டு நடை பெறுவதே அறமாகும்.

6. அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

(ப-ரை அன்று-இறந்துபோகின்ற காலத்தில், அறிவாம் என்னாது - அறிந்து செய்பவராவோம் என்று இருக்காமல், அறம் செய்து . இப்போதே அறத்தினைச் செய்வாயாக, அது . அப்படிச் செய்வதானது, பொன்றுங்கால் - இறக்குங் காலத்தில், பொன்றா - அழியாத, துணை - துணையாக

இருக்கும்.

|க-ரை கடைசிக் காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும்.

7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை.

(ப.ரை அறத்து-அறத்தினது, ஆறு.பயனும் வழியும், இது . இதுதான், என என்று, வேண்டா - எடுத்துக் கூறல் வேண்டுவதில்லையாகும், (ஏனெனில்) சிவிகை . பல்லக் வினை, பொறுத்தானோடு.க.மந்து தூக்கிச் செல்பவனோடு,