பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ஊர்ந்தான் இடை - அமர்ந்திருப்பவன், (ஆகிய இரு. வரிடையே காட்சியளவினாலேயே உணரப்பட்டு விடும்.

(கரை) அறத்தின் வழி (பயன்) இதுதான் என்று: கேட்டறிய வேண்டுவதில்லை; பல்லக்கினைத் துரக்கிக். கொண்டு போகின்றவனையும் உள்ளே உட்கார்ந்து கொண்டு போகின்றவனையும் பார்க்கும் காட்சியளவி னாலேயே உணர்ந்து கொள்ளப்படும்.

8. வீழ்நாள் படா அமை கன்றாற்றின் அஃது.ஒருவன்

வாழ்நாள் வழி அடைக்குங் கல்.

(ப-ரை) வீழ்நாள்-அறம் செய்யாமல் வீணாகும் நாள், படா.அமை - உண்டாகிவிடாமல், நன்று ஆற்றின் .. அறத்தினைச் செய்வானானால், அஃது, அவ்வாறு செய்வ தானது,ஒருவன் ஒருவன், வாழ்நாள் மீண்டும் உயிரோடு. கூடி வாழும் நாளின், வழி-அடைக்கும்-வழியினை அடைக். கின்ற, கல் - கல்லாகும்.

(க-ரை) அறம் செய்யாத நாளே இல்லாமல் ஒருவன் நடந்து கொள்ளுவானானால், அஃது மீண்டும் உடம். போடு பிறத்தல் என்னும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாகும்.

9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

(ப-ரை அறத்தான் - அறவழிகளினாலே, வருவதே. இன்பம் - வருவதான இன்பமே மெய்யான இன்பமாகும், மற்றெல்லாம் - வேறு முறைகளில் வருவன வெல்லாம், புறத்த - இன்பமல்லாமல் துன்பம் தருவனவேயாகும், புகழும் இல - புகழினையும் உடையவை அல்ல.

(கரை) அறச் செயல்களினால் வருவதுதான் உண்மை. யான இன்பமாகும். மற்ற முறைகளில் வருவனவெல்லாம். இன்பமும் அல்ல; புகழுடையனவும் ஆகா.