பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப் பால்

களவு இயல்

109. தகை அணங்கு உறுத்தல் 1பெண்ணின் அழகு தலைவனை வருத்தல்)

1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081 (ப-ரை) கனம். கனத்த, குழை . காதணிகளையுடைய இப்பெண், அணங்குகொல் - ஒரு தெய்வமகளோ, ஆய் - தனிச் சிறப்புப் பெற்ற, மயில் கொல் . ஒரு மயிலோ, மாதர் கொல் . அல்லது மாது தானோ என்று, என் . எனது,

நெஞ்சு - நெஞ்சம், மாலும் . மயங்குகின்றது. (ஒ . அசை நிலை)

(கரை) பொருந்த குழையுடைய இப்பெண் ஒரு தெய்வ மகளோ? அல்லது தனிச்சிறப்புடைப் ஒரு மயிலோ? அல்லது மாதுதானோ இன்னவள் என்று துணிய முடியாமல் எனது நெஞ்சு மயங்குகின்றது.

2. கோக்கினாள் நோக்கெதிர் கோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1082

(ப-ரை நோக்கினாள் - இத்தகைய வனப்பினை அடைய இப்பெண், நோக்கு . எனது நோக்கிற்கு,