பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

எதிர் . எதிரில், நோக்குதல் - பார்த்தல், தாக்கு-தானே தாக்கி வருகின்ற, அணங்கு - தெய்வமகள், தானை. சேனையையும், கொண்டு கொண்டு வந்த, அன்னது .

தன்மையினை, உடைத்து - உடையதாகும்.

(கரை) இப்பெண் எனது பார்வைக்கு எதிராகப் பார்த்தல், தானே வருத்துகின்றஇப்பெண், சேனையையும் கொண்டு வந்த தன்மையினை உடைத்து.

3. பண்டு அறியேன் கூற்றுளன் பதனை இனியறிந்தேன்

பெண்தகையான் பேரமர்க் கட்டு. 1083

!ப-ரை) கூற்று - கூற்றுவன், என்பதனை . என்று. கூறப்படுவதனை, பண்டு - முன் பெல்லாம், அறியேன் . கண்டறியேன், இனி - இப்போது, அறிந்தேன் - அறிந்து கொண்டேன், (அது) பெண் . பெண் மைக் குரிய, தகையான் . தன்மைகளுடனே, பேர் . பெரியதான, அமர் கட்டு - போர் செய்கின்ற கண்களை உடையது.

(கரை) கூற்றுவன் என்று கூறப்படுவதினை முன்பெல் லாம் கண்டு அறியேன். இப்போது கண்டறிந்தேன். அது பெண் தன்மையுடனே பெரியனவாகப் போர் செய்யும். கண்களை உடையதாகும்.

4. கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தான் பெண்தகை, பேதைக்கு அமர்த்தன கண். 1084,

(ப-ரை பெண்தகை - பெண் தன்மையுடனே கூடிய, பேதைக்கு - இப்பேதைப் பெண்ணுக்கு, இருக்கின்றது. கண் - கண்கள், கண்டார் . பார்த்தவரது, உயிர் - உயிரினை, உண்ணும் . உண்ணுகின்ற, தோற்றத்தான் . தோற்றத்துடனே பொருந்தி, அமர்த்தன - பெண். தன்மைக்கு மாறுபட்டனவாய் இருந்தன.

க.ரை பெண் தன்மையுடன் கூடிய இப்பேதைக்கு இருக்கும் கண்கள், தம்மைக் கண்டவர் உயிரை உண்ணுகிற,