பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463

நோக்கும் . நோக்குகின்றாள், நோக்காக்கால் நான் நோக் காதபோது, தான் - அவள், நோக்கி - என்னை நோக்கி, மெல்ல - மெதுவாக வெளிப்படாமல், நகும். மகிழ்ச்சி கொள்ளுவாள்.

(க-ரை) யான் அவளைப் பார்க்கும் போது நிலத் தினை நோக்கி நின்றாள். நான் நோக்காதபோது என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழ்கின்றாள்.

5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல ககும். 1095

!ப-ரை) குறிக்கொண்டு நேராக ஒரு குறிப்பினைக் கொண்டு, நோக்காமை - நோக்காதது, அல்லால் . அல்லாது, ஒரு கண் ஒரு கண்ணை, சிறக்கணித்தாள் . சுருக்கிக் கொண்டவள், போல . போன்று, நகும் . என்னை நோக்கி உள்ளுக்குள் மகிழ்வாள்.

|க-ரை; அவளாகக் குறிக்கொண்டு நோக்குவதுபோல் அல்லாமல் ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல என்னை நோக்கிப் பின் தனக்குள்ளே மகிழ்கின்றாள்,

6. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅச்சொல்

ஒல்லை உணரப் படும். 1096

(பரை) உறாஅதவர்போல் வெளிப் பார்வைக்கு அயலார் போல, சொலினும் . கடுமையான சொற்களைச் சொன்னாலும், செறாஅர் . உள்ளத்தில் பகையில்லாதவர் சொல் . சொற்கள், ஒல்லை - விரைவில், உணரப்படும் - .உணர்ந்து தெரிந்து கொள்ளப்படும்.

(கரை) வெளிப்பார்வைக்கு அயலார் போலக் கடுஞ் சொல் சொன்னாலும் மனத்தில் பகைமையில்லாத வருடைய சொல் விரைவில் அறிந்து கொள்ளப்படும்.