பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு இயல் 116. பிரிவு ஆற்றாமை |நாயகன் பிரிவும் நாயகியின் துயரமும்)

1. செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுகின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. 1151

(ப-ரை) செல்லாமை - நீங்கள் எம்மை விட்டுப் பிரியாதிருப்பது, உண்டேல் . இருக்குமானால், எனக்குரை. என்னிடம் சொல்லுங்கள், மற்று . அதுவல்லாமல், பிரிந்து சென்று நின் - உம்முடைய, வல் - விரைவான, வரவு . வருகையினை, வாழ்வார்க்கு - (நீங்கள் வரும்போது) உயிருடன் வாழ்கின்றவர்க்கு, உரை - சொல்லுங்கள்.

|கடரை தாங்கள் எம்மைவிட்டுப் பிரியாதிருப்ப தென்றால் அதனை எனக்குச் சொல்லுங்கள், பிரிந்துபோய் விரைவில் வருவேன்' என்பீரானால் அதனைத் தாங்கள் திரும்பி வரும்போது உயிர் வாழ்கின்றவர்களுக்குச் சொல்லுங்கள்.

2. இன்கண் உடைத்துஅவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு. 1152

fu-ரை அவர் . அவருடைய, பாtவல் . பார்வை யானது, இன் கண் - இனிய தன்மையினை, உடைத்து - உடையதாயிற்று, புணர்ச்சி - நிகழ்ந்த புணரிசிசியின் தன்மை, பிரிவு பிரிவார் என்று, அஞ்சும் . அஞ்சுகின்ற, புன்கண் உடைத்து - துன்பத்தினை உடையதாக இருந்தது 1ஆல் - அசைநிலை)