பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

(கரை) அவருடைய பார்வை மட்டும் நமக்கு இன்பம் தருவதாக இருக்கின்றது. அவர் பால் புணர்ச்சி நிகழ, அது அவர் பிரிவார் என்ற அச்சத்தினை உடையதாக இருந்தது.

3. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவு ஓர் இடத்துஉண்மை யான். 1153

!ப-ரை அறிவு - பிரிதல் துன்பத்தினை அறிந்து, உடையார் கண்ணும் - உணரவல்ல நாயகரிடத்திலும், ஓரிடத்து . ஒரோவழி, பிரிவு . பிரிந்து செல்லுதல், உண்மையான் . நிகழ்வதால், தேற்றம் . அவர் நம்மீது அன்புடையார் என்று உறுதி செய்தல், அரிது - முடியாத தாக இருக்கின்றது. (அரோ . அசைநிலை)

(கரை) பிரியேன்" என்று தான் சொன்னதையும் நமது பிரிவாற்றாமையினையும் அறிந்த காதலரிடத்தும் ஒரோவழி பிரிவு நிகழ்வதால் அவர் அன்புடையவர் எனறு. தெளிவது அரிதாக இருக்கின்றது.

4. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு. I 154. (ப-ரை அளித்து - அன்பினைப் பெய்து, அஞ்சல் . பிரிய மாட்டேன் அஞ்சாதே, என்றவர் . என்று சொல்லி யவரே, நீப்பின் - பிரிந்து செல்லுபவரானால், தெளித்த . அவர் அன்புடன் சொல்லிய, சொல் சொல்லினை, தேறியார்க்கு - உண்மையென்று நம்பியவர் மேல், தவறு. உண்டோ - குற்றம் உண்டோ?

(கரை) உன்னை விட்டுப் பிரியேன், அஞ்சாதே" என்ற தலைவர், தாமே பிரிந்து செல்லுவாராயின் அவர் தெரிவித்த சொல்லை நம்பியவர் மேல் தவறு உண்டோ? 5. ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல் மற்று.அவர்

நீங்கின் அரிதால் புணர்வு. 1155 (ப-ரை ஒம்பின் - எனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், அமைந்தார் . அதற்கு உரியவரான