பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும். (ப-ரை வாழ்வாங்கு-வாழ வேண்டிய முறையில், வையத்துள்.இவ்வுலகில், வாழ்பவன்-வாழ்கின்ற இல்லறத் தான், வான்.வானுலகில், உறையும்.வசிக்கின்ற, தெய்வத் துள்-தெய்வங்களுடனே, (ஒன்றாக வைக்கப்படும். வைக் கப்படுவான்.

(கரை) இல்வுலகில் இல்லறத்தினை நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்பவன் வானத்தில், வாழ்கின்ற தெய்வங்களுள் ஒன்றாக வைத்து மதிக்கப்படுவான்.

|

6. வாழ்க்கைத் துணை நலம்

(இல்லறத்திற்குரிய துணையான மனைவியின் பெருமை, நற்பண்பு, கடமை முதலியன)

1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(ப-ரை) மனை . மனையறத்திற்கு, தக்க - தகுந்த, மான்பு:சிறப்பினை, உடையளாகி.உடையவளாக இருந்து, தற்கொண்டான் - தன்னைக் கொண்டவனது, வளம். வருவாய்க்கு, தக்காள். தகுந்தபடி வாழ்பவளே, வாழ்க் கைத் துணை - வாழ்க்கைத் துணைவியான மனைவி யாவாள். -

(க-ரை) மனையறத்திற்குத் த கு ந் த நற்குண நல்செய்கையான சிறப்பினையுடையவளாகித் தன்னைக் கொண்டவனது வரவுக்குத் தகுந்தபடி வாழ்பவளே வாழ்க்கைத் துணையாவாள்,