பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

5. செற்றார் எனக்கைவிடல் உண்டோ கெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர். 1245

(ப. ரை) நெஞ்சே.நெஞ்சமே, யாம் உற்றால் . யாம் அவரிடம் அன்பு கொண்டிருக்க, உறாஅதவர் . நம்மிடம் காதல் கொள்ளாதவரை, செற்றார் - வெறுத்து விட்டார். என - என்று நினைத்து, கைவிடல் உண்டோ - கை விட்டிருக்கும் வலிமை நமக்கு இருக்கின்றதோ?

(க-ரை) நெஞ்சமே; நாம் அன்பு கொண்டு அவரைக் காதலித்திருக்க, நம்பால் காதல் கொள்ளாதிருக்கும் அவரை வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட் டிருக்கும் வலிமை நமக்கு உண்டோ?

8. கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய்

பொய்க்காய்வு காய்தி.என் கெஞ்சு. 1246

|பலர) என் . என்னுடைய, நெஞ்சு மனமே கலந்து - புணர்ச்சியால், உணர்த்தும் . நமது பிணக்கினை. நீக்க வல்ல, காதலர் - காதலசை, கண்டால் . கண்டு, விட்டால், புலந்து - பொய்யாகவேனும் கோபித்து , உணராய் பிறகு புலப்பதை நீக்கி விடுதல் செய்யாத நீ, பொய் . பொய்யான, காய்வு . கோபத்தில், காய்தி . கோபித்துக் கொண்டிருக்கிறாய் .

(க.ரை) என் நெஞ்சமே! நாம் பிணங்கிக் கொண்டு புலந்தி ருத்தால் கல வியினாலே நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் புலந்து பின் நீங்காத நீ இப்போது பொய்யாகக் கோபித்துக்கொண்டிருக்கின்றாய்.

7. காமம் விடுஒன்றோ காண்விடு கல்நெஞ்சே

யானோ பொறேன்.இவ் விரண்டு. 1247

(ப.ரை) நல் நல்ல, நெஞ் ச - நெஞ்சமே ஒன்று - காமம் ஒன்று காம இன்பத்தினை, விடு விட்டு விடு,