பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

7. சிறைகாக்கும் காப்புளவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

(ப-ரை) சிறை காக்கும்.சிறை வைத்துப் பாதுகாக் கின்ற, காப்பு. காவல் என்பது, எவன் செய்யும்.என்ன பயனைச் செய்ய முடியும், மகளிர்-பெண்கள், நிறை. நிறை குணத்தினால், காக்கும். தங்களைக் காத்துக் கொள்ளுகின்ற, காப்பே தலை-காவல்தான் தலைமையான காவலாகும்.

(கரை) மகளிரைச் சிறை வைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலை யான காப்பாகும்,

8. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உல்கு. (ப-ரை) பெண்டிர் - மனைவியர், பெற்றான் - தாம் பெற்ற கணவனை, பெறின்-போற்றி வணங்கப் பெற்றால், புத்தேளிர் வாழும் - தேவர்கள் வாழுகின்ற, உலகுஉலகத்தில், பெரும்.பெரிய, சிறப்பு-சிறப்பினை, பெறுவர். பெறுவார்கள்.

(கரை) பெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள்.

9. புகழ்புரிந் தில்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை. (ப-ரை) புகழ் புரிந்த-புகழினை விரும்பிய, இல்-இல் லானை, இல்லோர்க்கு இல்லாதவர்களுக்கு, இகழ்வார். தன்னை இகழ்ந்து பேசுபவர்கள், முன் . முன்னே, ஏறுபோல்-ஆண் சிங்கம் போன்ற, பீடு-பெருமையாக, நடை-நடந்து செல்லல், இல்லை-இல்லையாகும்.