பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

(க-ரை) புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவரி முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.

10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

கன்கலம் கன்மக்கட் பேறு.

(ப.ரை) மங்கலம்.மங்கலமான நன்மை, என்ப-என்ப தாகக் கூறுவர், (எதை யென்றால் மனைமாட்சிமனைவியினுடைய நற்பண்புகளை (சிறப்பினை), மற்று அதன்-அவைகளுக்கு, நன்..நல்ல, கலன்.அணிகலம் என்பர், எவை என்றால்) நன்..நல்ல, மக்கட் பேறு.மக்கள் செல்வம் பெற்றிருப்பதனை.

(க-ரை) மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத் திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.

7. மக்கட் பேறு

(நன்மக்களால் அடையும் இன்பமும் பயனும் சிறப்பும் பிறவும்)

1. பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

(ப-ரை) பெறுமவற்றுள்-ஒருவன் பெறுகின்ற செல்வங் களுள், அறிவு-அறிய வேண்டுவனவற்றை, அறிந்த, அறியக் கூடிய, மக்கட்பேறு-சிறந்த மக்களைப் பெறுதல், அல்ல. அல்லாமல், பிற-மற்ற செல்வங்களை யாம் அறிவு தில்லை.யாம் அறிந்திருக்கவில்லை,