பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

போற்றுபவனுடைய, இல் - இல்லத்தில், செய்யான் . செல்வமாகிய திருமகள், அகன் - மனம், அமர்ந்து மகிழ்ச்சி யுடன், உறையும் - வசிப்பாள்.

|க-ரை முகமலர்ச்சியுடன் த க் க விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ச்சி புடன் வாழ்ந்திருப்பாள்.

5. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

|ப-ரை விருந்து - விருத்தினர்களை, ஒம்பி - போற்றி உபசரித்து, (பிறகு) மிச்சில் - மீதியாக இருப்பதை, மிசை வான் - உண்ணுபவனுடைய, புலம் - நிலத்திற்கு, வித்தும் இடல் விதை இடுதலும், வேண்டுமோ - வேண்டுமோ? (வேண்டியதில்லை) கொல் - அசை நிலை.

(க-ரை விருந்தினரைப் போற்றி உபசரித்து மீதியாக இருப்பதை உண்பவன் நிலத்திற்கு விதை இடுதலும் வேண்டுமோ? விதைக்க-(விதையாக)-வைத்திருப்பதையும் சமைத்து உணவளிப்பான் என்பதாம்.

6. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

(ப-ரை செல்விருந்து - வந்து செல்கின்ற விருந்தினரை, ஒம்பி பேணிக்காத்து வருவிருந்து பார்த்திருப்பான் . வருகின்ற விருந்தினரின் வரவு பார்த்திருப்பான், வானத் தவர்க்கு வானத்தில் வாழ்பவர்களுக்கு, நல் . நல்ல கிறப்பான, விருந்து - விருந்தினன் ஆவான்.

(கரை) வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து அனுப்பி வைத்து, வருகின்ற விருந்தினரை எதிரி நோக்கி அவருடன் உண்ண இருப்பவன் வானத்தவர்க்கு நல்ல விருந்தினனாவான். х