பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

|க-ரை) அயலார், பகைவர், நண்பர் என்ற யாவரிடத். திலும் நடுவுநிலைமை என்ற முறைமை விடாமல் நடந்து கொண்டால், நடுவு நிலைமை எனப்பட்ட ஓர் அறமே போதுமான நன்மையாகும்.

2. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

செப்பம் . நடுவு நிலைமை, உடையவன் - உடைய வனுடைய, ஆக்கம் - செல்வம், சிதைவு - அழிவு, இன்றி . இல்லாமல், எச்சத்திற்கு - அவன் வழியில் வருவோர்க்கு, ஏமாப்பு - பாதுகாப்பாக இருப்பதை, உடைத்து - உடையதாகும்.

(க.ரை) நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாது: காப்பான உறுதியாதலை உடையதாகும்.

3. நன்றே தரினும் நடுவு இகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.

(ப-ரை) நன்றே நன்மையினையே, தரினும் . கொடுத்தாலும், நடுவு - நடுவு நிலைமை, இகந்து நீக்கப் பட்டு, ஆம் உண்டாகி வருகின்ற, ஆக்கத்தை - செல்வத் தினை, அன்றே - வந்த நேரத்திலேயே, ஒழிய விடல் - ஒழித்து விட்டு விடுதல் வேண்டும்.

(கரை) தீமையின்றி நன்மையினையே தருவதாக இருந்தாலும் நடுவு நிலைமை நீக்கப்பட்டு வருகின்ற செல்வத்தினை அப்போதே ஒழித்துவிடுதல் வேண்டும்.

4. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும். (ப. ரை) தக்கார் - நடுவு நிலைமையுடன் இருப்ாவர், தகவிலர் - நடுவு நிலைமை அற்றவர், என்பது - என்னும் உண்மையினை, அவரவர் . அவரவர்களுக்கு உண்டாகும்,