பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

எச்சத்தால் காணப்படும் . அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் நன்மை தீமைகளால் தெரிந்து கொள்ளப்படும்.

(கரை) நடுவுநிலைமை உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் என்பதனை அவரவர்களுக்குப் பின், எஞ்சி நிற்கும் நன்மை தீமைகளால் அறிந்து கொள்ளப்படும்.

5. கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி.

|ப-ரை) கேடும் - கெட்ட நிலைமையும், பெருக்கமும் . செல்வப் பெருக்கமும், (யாவருக்கும்) இல் - இல்லாதது, அல்ல - அல்லவாம், (எல்லோருக்கும் உண்டு ஆதலால்) நெஞ்சத்து - நெஞ்சத்தில், கோடாமை - ஒரு பக்கமாகச் சாய்ந்து விடாதிருத்தலே, சான்றோர்க்கு அணி - உயர்ந்த பண்பாளர்களுக்கு அழகாகும்.

(க-ரை) கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாத தல்ல; அவை பிறவியிலேயே அமைந்து கிடப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஒரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.

6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

கடுவுஒரீஇ அல்ல செயின்.

(ப-ரை) தன் - தன்னுடைய, நெஞ்சமானது, நடுவு - நடுவு நிலைமையிலிருந்து, ஒரீஇ விலகி, அல்ல - அல்லாதவைகளை, செயின் - செய்ய எண்ணினால், யான் கெடுவல் - யான் கெட்டு விடுவேன், என்பது அறிக - என் பதைத் தெரிந்து கொள்ளுவானாக.

(கரை) ஒருவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமையில்

நீங்கி ஒன்றினைச் செய்ய நினைக்குமானால் அந்த

நினைப்பு யான் கெட்டு விடுவேன்' என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பாக அறிதல் வேண்டும்.