பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இல்லாதிருத்தலை, ஒருதலையா - மிகவும் உறுதிப் பாடாக, பெறின் பெற்றிருந்தால்.

(கரை) நடுவு நிலைமை என்பது சொல்லுகிற சொல் லில் கோணுதல் இல்லாமல் இருத்தலாகும். மனத்தினிடத் தில் கோணுதல் இல்லாமலிருப்பதைத் திண்ணியதாகப் பெற்றிருந்தால் நன்மை பயப்பதாகும்.

10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

(ப-ரை) பிறவும் . மற்றவர்களது பொருள்களையும், தமபோல் தம்முடைய பொருள்களைப் .ே பா ற் றி க் கருதுவதுபோல, பேணிச்செயின் - காப்பாற்றிச் செய்தால், (அதுவே வாணிகம் - வாணிகம், செய்வார்க்கு செய்யும் வாணிகர்களுக்கு, வாணிகம் - நல்ல வாணிகம் என்ப தாகும்.

(கரை) பிறர் பொருளையும், தம்முடைய பொரு ளைக் காப்பதுபோலக் காத்து வாணிபம்செய்தால், அதுவே வாணிபம் செய்பவர்களுக்கு நல்ல வாணிபம் ஆகும்.

13. அடக்கம் உடைமை

(குணம், மொழி, மெய் ஆகியவற்றைத் தீநெறியில் செல்லவொட்டாமல் தடுத்து அடக்கத்துடன் இருத்தல்)

1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர்.இருள் உய்த்து விடும்.

(ப.ரை) அடக்கம் - அடக்கமுடைமை என்னும் நற் குணம், அமரருள் உய்க்கும் - அமரர்கள் உலகில் செலுத்துவ