பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை

(மக்களுக்குரிய ஒழுக்கத்தில் கின்று வாழ வேண்டிய முறைகளைக் கூறுதல்)

1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

(ப-ரை) ஒழுக்கம்- ஒழுக்கமானது, விழுப்பம் தரலான்பெருஞ்சிறப்பினைத் தருதலால், ஒழுக்கம் . அவ்வொழுக்க மானது, உயிரினும் . உயிரினையும் விட, ஒம்பப்படும் - சிறந்ததாகப் போற்றிக் காக்கப்படும்.

(கடரை) ஒழுக்கம் எல்லோருக்கும் பெருஞ் சிறப்பினைத் தருதலால் அவ்வொழுக்கம் உயிரினையும்விட மேம்பட்ட தாகப் பாதுகாக்கப்படும்.

2. பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்

தேரினும் அஃதே துணை.

(ப.ரை) ஒழுக்கம் - ஒழுக்கத்தினை, ஒம்பி - போற்றிக் காத்து, புரிந்து - துன்புற்றும்கூட, காக்க - காப்பாற்ற வேண்டும், தெரிந்து - பலவற்றையும் தெரிந்து ஆராய்ந்து, ஒம்பி - மனத்தினை ஒரு வழியில் நிறுத்தி, தேரினும் . தேர்ந்து தெரிந்து கொண்டாலும், துணை அஃதே . துணையாக நிற்பது அந்த ஒழுக்கமேயாகும்.

(க-ரை) ஒழுக்சத்தினை அழிவு வராமல் போற்றி வருந்தியும் கூடக் காத்தல் வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து தேர்ந்து தெரிந்து கொண்டாலும், துணையாக இருப்பது அந்த ஒழுக்கம் ஒன்றேயாகும்.

3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.