பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்.இல்

தீமை புரிந்தொழுகு வார்.

(ப-ரை தெளிந்தார் - நல்லவரென்று நம்பித் தெரிந்து இருப்பவருடைய, இல் - இல்லாளிடத்தில், தீமை. தீமையான செயலை, புரிந்து - விரும்பிச் செய்து, ஒழுகுவார் - நடந்து கொள்ளுபவர்கள், விளிந்தாரின் . இறந்த வரின், வேறு வேறானவர்கள், அல்லர் - அல்லர், மன்ற . இறந்தவரே யாவர்.

(க-ரை தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிரு டையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள்.

4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறன்இல் புகல்.

(ப ரை) தினைத்துணையும் - மிகச் சிறிய தினையளவு கூட, தேரான் . தனது குற்றத்தினை எண்ணாமல், பிறன் - மற்றவனுடைய, இல் - இல்லாளிடத்தில், புகல் - விரும்பிப் போதல், எனைத்துணையர் . எவ்வளவு பெரியவர்களாக, ஆயினும் . இருந்தாலும், என்னாம் - என்ன பயனுடைய தாகும்.

(க-ரை தினையளவும் தமது குற்றத்தினைக் காம

மயக்கத்தினால் நினையாமல் பிறன் இல்லத்தில் புகுவோர்

எவ்வளவு பெருமையுடையவராக இருந்தாலும் என்ன? யாதொரு பயனுமில்லை.

5. எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது கிற்கும் பழி .

(ப-ரை) எளிது - எளிமையானது, என என்று .எண் ணி, இல் - மற்றவன் இல்லாளிடம், இறப்பான் - செல்லுகிறவன், விளியாது . மறையாமல், எஞ்ஞான்றும் ,