பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

2. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

(ப-ரை) யார் மட்டும் - யாவராக - இருந்தாலும், lஅவரிடம்) அழுக்காற்றின் - பொறாமைக் குணத்தி லிருந்து, அன்மை.நீங்குதலை, பெறின் - பெற்றிருப்பானே பாகில், விழுப்பேற்றின் - அவன் அடைகின்ற சீரிய செல்வங்களுள் அஃது ஒப்பது - அச்செல்வத்திற்குச் சம மானது, இல்லை - வேறு எதுவும் இல்லையாகும்.

|க-ரை) ஒருவன் யாவரிடத்திலும் பொறாமை இல்லா மல் இருப்பதே சிறந்த செல்வமாகும். அவன் பெறுகின்ற சிரிய செல்வங்களுள், அச்செல்வத்திற்குச் சமமானது வேறு எதுவும் இல்லை.

3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.

ப-ரை) அறன் - அறன் என்பதையும், ஆக்கம் - செல்வத்தினையும், வேண்டாதவன்; என்பான் . என்பவன், பிறன் - மற்றவனுடைய, ஆக்கம் - செல்வத்தினைக் கண்டு, பேணாது-விரும்பி மகிழ்ச்சியடையாமல், அழுக்கறுப்பான். பொறாமைப்பட்டுக் கொண்டிருப்பவனாவான்.

|கடரை) அறத்தினையும் செல்வத்தினையும் வேண் டாம் என்று சொல்லுகின்றவன், மற்றவன் செல்வத்தைக் கண்டபோது தாளாமல் பொறாமைப்படுவான்.

4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

எதம் படுபாக்கு அறிந்து.

|ப-ரை) இழுக்காற்றின் அழுக்காறு எனப்படும் அத்தீய நெறிகளால், ஏதம் . குற்றம், படுபாக்கு . வருவதை அறிந்து - தெரிந்து கொண்டு, அழுக்காற்றின் . பொறாமை கொண்ட தன்மையினாலே, அல்லவை