பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 36 அதிகாரம் 42 கேள்வி 41. கேள்வியால் அடைகின்ற அறிவு செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் சிறந்த செல்வமாகும், அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானதும் ஆகும். 42 செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபொழுது, அதற்குத்துணையாக உடலை ஒம்புவதன் பொருட்டு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். 43. செவியுணவாகிய கேள்வியை உடையவர் நிலவுலகில் வாழ்கின்றவரானாலும் அவியுணவை ஏற்றுக் கொள்ளும் தேவ ரோடு ஒப்பாவர். . 44. தான் முயன்று நூல்களைக் கற்கவில்லையானாலும், கற்ற வரிடம் கேட்டாவது அறிவு பெறவேண்டும் அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வரும்போது ஊன்று கோல் போல் துணையாகும். 45. நல்லொழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச் சொற்கள் வழுக்கும் சேற்றில் உதவும் ஊன்று கோல்போல் வாழ்க்கையில் எப்போதும் உதவியாக இருக்கும். 416. எவ்வளவு சிறிதாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். அஃது அந்த அளவுக்கேனும் நிறைந்த பெருமையைத் தரும். 47. நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வி அறிவையும் உடையவர்கள், ஒன்றைப் பிறழ உணர்ந்தாலும் தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லார். 48. கேள்வியறிவால் துளைக்கல் பெறாத செவிகள் பிறஒலிகளையெல்லாம் கேட்குமாயினும் உண்மையில் செவிடான தன்மையுடையவே. 49. நுட்பமான கேள்வியறிவைப் பெறாதவர்கள் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையேயாகும். 42. செவியால் கேள்விச் சுவையை உணராமல் வாயால் அறியும் நாவின்சுவையுணர்வுமட்டுமே உடையவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.