பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 90 அதிகாரம் 44 குற்றங் கடிதல் 43. செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாத வருடைய வாழ்வில் காணும் பெருஞ் செல்வம் சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும். 432 சயதே உலோப குணமும் மாட்சியில்லாத மான உணர் வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும். 43.பழி நானுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறுகுற்றம் தம்மிடம் நேர்ந்தாலும், அதனைப் பனையளவாகக் கருதிக் குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர். . 43. குற்றமே ஒருவனுக்கு அழிவைத் தருகின்ற கொடிய புகையாகும்; ஆகவே, குற்றம் செய்யாமலிருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும். க35. குற்றம் நேர்வதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத வனுடைய வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர்போல் அழிந்து விடும். 35 முன்ன்ே த்ன்குற்றத்தைக் கண்டு நீக்கிக் கொண்டபிறகு பிறருடைய் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவாணனால் தல்ை வனுக்கு என்ன குற்றம் உண்டாகும்? கி. பொருளைப் பெற்றபோது அதனால் செய்ய வேண்டிய வற்றைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வம் உய்யும் தன்மையில்லாமல் அழியும். 438. பொருளினிடத்துப் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய உலோபத்தன்மை எந்தக் குற்றங்களோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். ல், எக்காலத்திலும் தன்னையே மிக உயர்வாக வியந்து பேசுதல் கூடாது. நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்யவிரும்புதலும் செய்தலும் கூடாது. 40. தன் விருப்பம் பிறர் அறியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால் தன்னை வஞ்சித்துப் பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் யாவும் பயனில்லாமல் அழிந்தொழியும்.