பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 94. அதிகாரம் 46 சிற்றினம் சேராமை 45. பெரியோரின் இயல்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும், சிறியோரின் இயல்பு அதனையே சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்ளும், - 452 சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும். அதுபோல மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். 453, மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் ஏற்படும். இவன் இன்னவன் எனப்படும் சொல் அன்னவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும். 454, ஒருவனது சிறப்பறிவு அவனது மனத்தில் உள்ளது போலக் காட்டினாலும், உண்மையாக நோக்கும்போது அஃது அவன் சேர்ந்த இனத்தையொட்டியதாகவே இருப்பது தெரியவரும். 45. மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் துய்மை ஆகிய இரண்டும் ஒருவன் சேர்ந்த இனத்தின் துய்மையை ஒட்டியே அமையும். 456. மனம் தூய்மை உடையவர்களுக்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்றாக அமையும் இனம் துய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் யாதும் இல்லை. 45. மனத்தின் நல் நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும், இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தரும். 458. சான்றோர் மனநலத்தினை உறுதியாக உடையவராயினும், அவர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும். 459, மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும் அதுவும் தான் சேர்ந்த இன்த்தின் செம்மையால் மேலும் நல்ல காவலுடையதாகும். 480. நல்ல இனத்தைவிடச் சிறந்த துணையாவது உலகத்தில் யாதும் இல்லை. தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதுமான பகையும் இல்லை.