பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 96 அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 46. ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாக அதனால் முதலில் அழிவதையும் அழிந்தபின் ஆவதையும் பின்னர்க் கிடைக்கும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும். 452 ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் தான் மேற்கொள்ளும் செயலைப்பற்றி நன்றாகத் தேர்ந்து தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை. 463. பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்து விடக் காரணமான செயலை அறிவுடையோர் ஒருபோதும் மேற்கொள்ளர். 484:தமக்கு இழிவு தருவதான ஒரு குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் இன்ன ஊதியம் ப்யக்கும் என்னும் தெளிவில்லாத செயலை ஒரு போதும் தொடங்கார், 45. ஒரு செயலைப்பற்றி எல்லா வகையிலும் முற்றிலும் எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைமை நன்கு வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். 468. ஒருவன் செய்யத் தகாத செயல்களைச் செய்வதனால் கெட்டழிவான். செய்யத் தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். 46. நன்றாக எண்ணிய பிறகே ஒரு செயலைத் துணிந்து தொடங்க வேண்டும், துணிந்தபின்னர் எண்ணுவோம் என்று கருதுவது குற்றமாகும். 468, செய்வதற்குத் தக்க வழிகளிலே செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று அதன்ை முடிக்குமாறு காத்தபோதிலும் அது குறைபட்டுப் போய்விடும். 469. அவரவரது இயல்புகளை நன்றாக அறிந்து அவரவர்க்குத் தகுந்தவாறு செய்யிவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்ற்ம் உண்டாகி விடும். - 40. தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளது. ஆகையால் உலகம் இகழ்ந்து ஒதுக்காத செயல் களையே ஆராந்து செய்யவேண்டும்.