பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 憩 அதிகாரம் 49 காலம் அறிதல் 48 காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகல் நேரத்தில் வென்றுவிடும். அதுபோல் பகைவரை வெல்லக் கருதும் வேந்தர்க்கும் அதற்குத் தகுந்த காலம் வேண்டும். 432 காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் நில்லாத இயல்புடைய செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு பிணிக்கும் கயிறு ஆகும். 483 தகுந்த கருவிகளோடு தகுதியான காலத்தை அறிந்து செயலைமேற்கொண்டால் அரியசெயல்கள் என்பவையும் உளவோ? 484 ஏற்ற காலத்தை ஆராய்ந்து அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கை கூடும். 485. உலகத்தை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தை கருதிக்கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பர். 486, ஊக்கம் மிகுந்தவன் காலத்தை எதிர் பார்த்து பேருக்குச்செல்லாமல் அடங்கியிருப்பது.போரிடும் ஆட்டுக்கடா தன் புகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையது. 48.அறிவுடையவர் பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே தம் சினத்தை வெளிக்காட்டார்; வெல்வதற்குத் தகுந்த காலம் பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வர், 488. பகைவரைக் கண்டால் தமக்குச் சாதகமான காலம் வரும் வரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் அப்பகைவருக்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலைகீழாக வீழ்ந்து மாய்வர். 489, கிடைப்பதற்கு அரிய காலம் வந்து வாய்க்குமானால் அப்போதே தாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து முடித்தல் வேண்டும். - - 49. பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கைப் போல் அமைதியாக இருத்தல் வேண்டும் ஏற்ற காலம். வாய்த்தபோது அது மீனைக்குத்துவதுபோலத்தவறாமல்செய்து முடிக்கவேண்டும்.