பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #}4 அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் 50. அறம் பொருள், இன்பம், உயிர்காக்க அஞ்சும் அச்சம் ஆகியநான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தெளியப்படுவான். - 52. நல்ல குடியிலே பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழி பாவங்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையல் னிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும். 503. அருமையான நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவர்களிடத்திலும் ஆராய்ந்து பார்க்கும்போது அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். 50. ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து மிகுதியானவற்றைத் தெரிந்து அவற்றையும் தெளிந்து அவனைக் கொள்ள வேண்டும். 505. ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும் மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களேயாகும். 595 சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளிய வேண்டா அவர் உலகத்தோடு தொடர்பு இலர் அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு நாணார். 50. அறிய வேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல் தெளிந்தவர்க்கு அஃது எல்லா அறியாமையையும் தரும், 508 மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால், அஃது அவனுக்கு மட்டுமின்றி அவனுடைய வழிமுறையில் வருபவர்கட்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும். 509, யாரையும் ஆராயாமல் தெளியக் கூடாது. நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள் களைத் தெளிந்து நம்ப வேண்டும். 50. ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயம் கொள்ளுதலும் ஆகிய இவை நீங்கத் துன்புத்தையே தரும்.