பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 406 அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் 51. ஒருசெயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல் புடையவனையே அந்தச் செயலுக்குப் பயன் படுத்தவேண்டும். 52. செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கிவரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே பணியாற்ற வேண்டும். 513 அன்பு அறிவு ஐயமின்றித் தெளியும் ஆற்றல், பேராசை இல்லாமை ஆகிய இந்நான்கு பண்புகளையும் நிலையாக உள்ள வனையே செயலுக்கு உரியவனாகத் தெளியவேண்டும். 51. எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும் செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் உண்டு. 55. செய்யும் வழிகளை நன்கு அறிந்து இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக் கூடாது. 518 செய்பவன்பற்றி முதலில் நன்கு ஆராய்ந்து, பின்பு அவன் செய்யும் செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பெருந்துமாறு உணர்ந்து, அவனைச் செய்விக்க வேண்டும். 51. இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்து பிறகு அச் செயலை அவனிடமே செய்யுமாறு ஒப்படைக்க வேண்டும். 58. இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து அதன்பிறகு அவனையே அவ் வேலைக்கு உரியவன்கும்படி செய்ய வேண்டும். 59. மேற்கொண்டதொழிலில் எப்போதும் முயற்சி உடையவ ஒளின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுத் திருமகள் நீங்கி விடுவாள். 52. தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது. ஆதலால் மன்னவன் நாடோறும் அவனுடைய நிலைமையை ஆராந்து அறிய வேண்டும்.