பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 103 அதிகாரம் 53 கறறநதழால 52.ஒருவன் வறியனானபோதும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. 521 அன்பில் நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால் அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத செல்வ நலங்களையும் அவனுக்குக் கொடுக்கும். * 523. கற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாத வனுடைய வாழ்க்கை குளப் பரப்புகள்ரயில்ாமல் நீர் நிறைந்தாற் போன்றது. - 524 சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல், ஒருவன் செல்வத்தை அடைந்ததனால் பெற்ற பயனாக அமையும். 525 ஒருவன் சுற்றத்தார்க்கு வேண்டிய பொருள் கொடுத்தலும் அவரோடு இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனனல், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான். 526 மிகுதியாகக் கொடுக்கும் இயல்புடையவனாயும், சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றம் உடையவர் உலகில் எவரும் இல்லை. 52. காக்கை தனக்குக் கிடைத்ததை மறைத்து வைக்காமல் தன் இனத்தைக் கரைந்து அழைத்து உண்னும், ஆக்கமும் அத்தகைய இயல்பினருக்கே உண்டு. 528. அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல் அவரவர் சிறப்புக்கு எற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் பெருகுவர். 529. முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, பிரிவதற்கு ஏற்ப்ட் காரணத்த்ெ நீக்கிவிட்டால் மீண்டும் அவர்களே வந்து சேர்வர். 530. தன்னிடமிருந்து காரணமில்லாமல் பிரிந்து சென்று பின் ஒருகாரணம் பற்றித் தன்பால் திரும்பி வந்தவனை,அரசன் அவன் நடிய உதவியைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும்.