பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 作2 அதிகாரம் 55 செங்கோண்மை 54. யாரிடத்திலும் நடுநிலைமை தவறாமல் இரக்கம் காட்டாமல் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனது ಸ್ಲೆ! 542 உலகில் உள்ள உயிர்கள் யாவும் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல மன்னவனின் செங்கோன்மையை நோக்கி குடிகள் வாழ்கின்றனர். 543. அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது மன்னவனது செங்கோன்மையாகும். 54. குடிகள்ை அன்போடு அணைத்துக்கொண்டு செங் கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைத் தழுவி இவ்வுலக வாழ்வு நிலை பெறுவதாகும். 55. நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் மன்னவன் நாட்டில் பருவமழையும் நிறைந்த விளைபொருள்களும் ஒருங்கே ஏற்படுவன வாகும். 546. வேந்தனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அன்று அவனது செங்கோல் கோணாதிருக்குமானால் அதுவே வெற்றியளிப்பதாகும். 54. உலகத்தையெல்ல்ாம் மன்னன் காப்பாற்றுவான் நீதி முறை கெடாதவாறு ஆட்சி புரிவானாயின், அரசனை அந்த முறையே காப்பாற்றும். 548 முறையிட வருபவரது காட்சிக்கு எளியனாய், அவர் களது குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன் தாழ்ந்த நிலையில் நின்று தானே கெட்டழிவான். 549. குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்தும், தானும் அவர்கட்கு நன்மை செய்து பேணியும், அவர்களது குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தும் முறைசெய்தல் அரசனது தொழில்: பழி அன்று. * 550. கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்து மற்றவர்களை அருளோடு காத்து முறைசெய்தல் பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.