பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 3 ió அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை 56. குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் 4i#á. 562 நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்பு கிறவர்கள் குற்றம் செய்தவரைத் தண்டிக்கத் ప్లీ அளவு கடந்து செய்வதுபோல் காட்டி அளவு மீறாமல் முற்ை செய்ய வேண்டும். 563. குடிமக்கள் அச்சம் அடையும் கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங் கோலரசன் திண்ணமாக விரைவில் கெட்டு அழிவை அடைவான். . 564. நம் அரசன் கடுமையானவன் என்று குடிமக்களால் கூறப்படும் பழிச்சொல்லுக்கு இலக்கு ஆகிய வேந்தன் தன் ஆயுள் குறைந்து விரைவில் அழிவான். 564. எளிதாகக் காண முடியாத தன்மையும் இனிமையற்ற முகம் காட்டும் இயல்பும் உடையவளது பெருஞ் செல்வம் பேய் கவனித்துக் காக்கும் புதையல் போன்றது. 556, கடுமையான மொழியும் இரக்கமற்ற தன்மையும் உடைய அரசன் பெருஞ்செல்வம் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்பொழுதே கெடும். 55. கடுமையான சொல்லும் முறை கடந்த தண்டனையும் அரசனது பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும். 568 அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராயாமல் செயற்படும் அரசன் தன் சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானனல் அவனுடைய செல்வம் சுருங்கும். 58. போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத அரசன் அது வந்த் காலத்தில் தற்காப்பு இல்லாதவனாக அஞ்சி விரைவில் அழிந்து போவான். 50. கடுங்கோலாகிய ஆட்சி முறை கல்லாத கயவர்களையே தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அந்த ஆட்சியை அல்லாமல் நிலத்திற்குச் சுமை வேறு யாதும் இல்லை.