பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 113 அதிகாரம் 58 iன்னோட்டம் 57. கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனால்தான் இவ்வுலகம் அழிவு அடையாமல் நிலை பெற்றுள்ளது. 52.உலகநடைமுறை என்பது கண்ணோட்டத்தால் நடைபெற்று வருவது கண்ணோட்டம் இல்லாதவர்கள் உயிரோடு இருப்பது நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயன் இல்லை. 53. பாடலோடு பொருந்தவில்லை என்றால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோலவே கண்ணோட்டத்தோடு அமை யாத கண்களாலும் பயன் இல்லை. 54. தேவையான அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளனபோல் தோன்றுதலைத் தவிர உடையவனுக்கு வேறு என்ன பயனைத் தரும்? 515 கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோடம் என்னும் பண்பே, அஃது இல்லையாயின் சான்றோரால் அது புண் என்றே கருதப்படும். 56. கண்ணோடு பொருந்தியவராக இருந்தும் கண்ணோட்டம் இரக்ககுணம் இல்லாதவர் மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர். 57. கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இருந்தும் குருடரே ஆவர். கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்ல: திருத்தல் என்பது பொருத்தம் இல்லை. 58. தம்தம் கடமையாகின்ற தொழில் கெடாமல் எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளவல்லவர்கட்கு இவ்வுலகமே உரிமையுடையது 59. தண்டித்து அடக்கப்படவேண்டியவரிடத்தும் கண்ணோட் பும் கட்டி அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்தது. 580. யாவராலும் விரும்பத் தகுந்த கண்ணோட்டம் என்னும் நாகரீகத்தை விரும்புகின்றவர்கள் பழகியவர் தமக்கு நஞ்சைப் பெய்வதைக் கண்டிலும் அதனை உண்டு அமைவார்கள்.