பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $22 அதிகாரம் 60 ஊக்கம் உடைமை 69. ஒருவர் பெற்றுள்ளார் என்று சொல்லத் தக்க சிறப்புடை யது.ஊக்கமாகும் ஊக்கம் இல்லாதவர் வேறுஎதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் அல்லர். 592 ஊக்கம் உடைமையே ஒருவரது நிலையான செல்வம் ஆகும் மற்றைய செல்வம் எல்லாம் நிலைபேறு இல்லாமல் ஒரு கல்த்தில் நீங்கியும் போய்விடும். 593 உறுதியான ஊக்கத்தையே தமது கைப்பொருளாகப் பெற்றவர்கள்தாம் செல்வம் இழந்துவிட்ட காலத்திலும் இழந்தோம' என்று நினைத்துக் கலங்கமாட்டார்கள். 594 தளராத ஊக்கம் உயைவர்களிடத்தில் ஆக்கமானது தானே அவர் இருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று சேரும். 595 நீர்ப் பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் ஆழத்தின் அளவானது. அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களது ஊக்கத்தின் அளவானதேயாகும். 595 எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியனவாகவே இருத்தல் வேண்டும். அந்த உயர்ந்த நிலை கைகூடாவிடினும் அல்வாறு எண்ணுவதை மட்டிலும் கைவிடவே கூடாது. 59. தன் உடம்பை மறைக்கும் அளவு தைத்துள்ள அம்பு களாலே புண்பட்டு வேதனை அடைந்தபோதும் யானை தன் பெருமையை நிலை நிறுத்தும் அதுபோல, ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்தும் தளர மாட்டார்கள். 598, ஊக்கம் இல்லாதவர் யாம் வள்ளண்மை உடையோம்' ಕ್ಹ இறுமாந்து மகிழ்ந்திருக்கும் நிலையை இவ்வுலகில் ஒருபோதும் அடையவே மாட்டார்கள். 599, யானை பருத்த உடம்பையும் கூர்மையான கொம்பு களையும் உடையதாக இருந்தாலும், ஊக்கம் உள்ளதாகிய புலி தன் மீது பாய்ந்தால் அதற்கு அஞ்சும். 800. ஒருவருக்கு வலிமையானது மிகுதியான ஊக்கமே, அவ்வூக்கம் இல்லாதவர் வடிவ வேறுபாட்டால் மக்களாகத் தோன்றினாலும், உண்மையில் மரங்களைப் போன்றவரே!