பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 鬣6 அதிகாரம் 82 ஆள்வினையுடைமை 61. இச்செயல் தம்மால் செய்ய முடியாதென்று சோர்வுறாமல் இருத்தல் வேண்டும் அதனைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும். 触 62. ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே கைவிட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால் செயலில் முயற்சியற்றிருப்பதை விட்டொழித்தல் வேண்டும். 63 பிறருக்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, விடாமல் முயற்சி செய்கின்ற உயர்ந்த பண்பில் நிலைத்துள்ளது. 61. போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வகளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாதது போல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்றதன்மையும் கெட்டுப்போகும். 65. தன் இன்பத்தை விரும்பாமல் மேற்கொண்ட செயலை முடிப்பதையே விரும்புகின்றவன். தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற துண் ஆவான். , 516 இடைவிடாத முயற்சி ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச்செய்யும் முயற்சி இல்லாமையோ அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும். 61. ஒருவன் சோம்பலிலே கரிய நிறமுடைய மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் திருமகள் வாழ்கின்றாள். 68. நன்மை விளைவிக்கும் ஊழ்இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று அறியவேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாம லிருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும். 69. ஊழின் காரணத்தால் ஒருசெயல் கை கூடாது போயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். 620. சேர்வின்றி இடைவிடாது முயற்சி செய்பவர்கள் செயலுக்கு இடையூறாக இருக்கும், விதியையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர். r