பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 臀 មៅ 64 அமைச்சு 53 ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவியையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும் செயலின் அருமையை யும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சனாவான். 632 மனவலியும் குடிபிறப்பும் காக்கும் திறனும் அறநூல்களைக் கற்றறிந்த அறிவும் விட முயற்சியும் ஆகிய ஐந்தும் திருந்தப் பெற்றவனே அமைச்சனாவான். 633. பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைப்பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து சென்றவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள்லும் வல்லவனே அமைச்சனாவான். 634. செயத்தக்க செயலை நன்கு ஆராய்தலும் ஆராய்ந்தபின் அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், எதனையும் ஐயத்திற்கு இடமில்லாமல் துணிவாக உரைத்தலும் வல்லவனே அமைச்சனாவான். 65. அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொற்செல்வனாய், எக்காலத்திலும் செயலாற்றும் திறன் அறிந்தவனாய் உள்ளவனே ஆராய்ந்து கூறும் துணையாவான். 636. இயற்கையான நுண்ணறிவும் அதனோடு சேர்ந்த நூலறிவும் ஒருங்கே உடையவரான அமைச்சர்களின் எதிராக எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாமல் போய்விடும். 65. செயலைச் செய்யும் வகைகளை நூலறிவால் அறிந்திருந்த போதிலும் உலகத்தின் நடைமுறை இயல்பை அறிந்து அதனோடு பொருந்துமாறு முறையாகச் செய்ய வேண்டும். 88. அறிந்து சொல்பவரின் அறவுரைகளை ஏற்றுக்கொள்ள மலும் தானும் அறிவற்ற அரசனானாலும் அவனுக்கும் உறுதியானவற்றை எடுத்துக் கூறுதல் அமைச்சரது கடமையாகும். 539. அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குத் தவறான வழியைக் கூறுகின்ற அமைச்சரைவிட எழுபது கோடி பகைவர்கள் பக்கத்தில் இருந்தாலும் நன்மைத் தரத்தக்கதாகும். 640 முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்தபோதிலும் செயல்திறன் அற்ற அமைச்சர்கள் குறையானவைகளையே செய்வர்.