பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $38 அதிகாரம் 68 வினைசெயல்வகை 61. ஒரு செயலை ஆராய்ந்து எண்ணுவதற்கு முடிவு மனத்துணிவு கொள்வதேயாகும். அவ்வாறு துணிவு கொண்டயின் காலம் தாழ்த்துவது குற்றமாகும். 82. காலம் தாழ்த்திச் செய்யத்தக்கவற்றைக் காலம் தாழ்த்தியே செய்தல் வேண்டும் காலம் கடத்தாமல் செய்யவேண்டியவற்றை விரைந்து செய்தல் வேண்டும். 63. இயலுமிடங்களில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது இயலாத நிலையில் அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்ய வேண்டும். 64. செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்கும் பகை, இவ்விரண்டின் எச்சம் ஆராய்ந்து நோக்கின் தீயின் எச்சம்போல் பெருகிப் பெருங்கேடு விளைவிக்கும். 65. வேண்டிய பொருள். ஏற்ற கருவிகள், தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் இல்லாமல் ஆராய்ந்து கொண்டபின்னரே செய்ய வேண்டும். 86. செயலை முடிக்கும் வகையும், வரக் கூடிய இடையூறும், டிந்த பின்னர் அல்டயும் பெரும் பயனையும் ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்ய வேண்டும். 67. செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டிய முறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பினை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகும். 68. மதநீரால் க்ன்னம் நன்ைபும் யானையைக் கொண்டு வேறொரு யானையைக் கட்டுதல்போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும். 69. மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்வதைவிட மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும். 680. ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவர். தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப்பணிந்தும் ஏற்றுக்கொள்வர்.