பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 岱6 அதிகாரம் ?? படைகாட்சி 78. எல்லா உறுப்புகளும் முறையாக அமைந்து களத்திற்படும் இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகைவரை எதிர்த்து நின்று வெற்றிதரும் படையே அரசனுட்ைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். 162. போரில் அழிவு வந்தவரிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகைவர்மேல் செல்லும் ஆண்மை வழிவழிப் புகழ்ோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வித்ாகும். 75. எலிகள் திரண்டு கடல்போல் ஆரவாரம் செய்தலும் ஒரு பாம்பு மூச்சுவிட்ட அளவில் அவை முற்றவும் கெட்டழியும். 184. போர்முனையில் மனத்தின் உறுதியில் அழிவுற்றதாய். பகைவருடையவஞ்சனைக்கு உட்படாததாய் வழிவழித் தொடர்ந்து வந்த அஞ்சமை உ அரசனது சிறந்த் படையாகும். 165. மனே சினங்கொண்டு தன்மீது எதிர்த்து வந்தாலும் அதனோடு ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நின்று தாங்கும் ஆற்றலையுடையதே சிறந்த படையாகும். 755 மீறப்பண்பு வீரம், மான உணர்வு, சிறந்த வழியில் செயற்படும் தன்மை, மன்னனால் தெளியப்பட்ட சிறப்பு ஆகிய நான்கும் படைக்குச் சிறந்த பாதுகாப்பாகும். 15. தன்மீது எதிர்த்து வந்த பகைவ்ரின் போரைத் தாங்கி நின்று.அவர்களை வெல்லும் வகைகளை ஆராய்ந்து. அவருடைய ஆகிப்படையைத் தாக்கி அதனைத்தடுத்து நிறுத்த மேற்செல்வதே சிறந்த படையாகும். 168 போரிடுகின்ற வீரமும் எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றலும் இல்லையாயினும், படை தன்னுடைய அணி வகுப்பின் தோற்றத் தால் பெரும்ை பெறும். 189, தேய்ந்து சிறுத்தலும், தலைவனிடம் நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை தவறாமல் வெற்றிபெறும், 70. நெடுங்காலமாக நிலைத்திருக்கும் மறவர்களை உடையதேயானாலும், தலைமை தாங்கும் தலைவர்கள் திறமை வில்லாதபோது படைக்குப் பெருமையின்றி அழிந்து படும்.