பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு išč அதிகாரம் 19 إسلساتلة 18. நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; அதைப்போல் பகைவர் செயலைத் தடுத்து நிறுத்தும் அரிய பாதுகாப்பு எதுவும் இல்லை. 8ே2. அறியுடையவரின் நட்பு திங்களின் வளர்பிறை போல் நாள்தோறும் வளரும் தன்மையுடையது அறிவில்லாதவரின் நட்பு தேய்பிறைபோல் நாளதோறும் தேய்ந்து போகும் தன்மையுடையது. 83. நற்பண்பு உடையவரின் நட்பு பழ்கப் பழக இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றது. 384, நட்புச் செய்து கொள்வது ஒருவரோடொருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று நண்பர் நெறிகடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்து உரைப்பதற்காகவும் ஆகும். 15. நட்புச் செய்வதற்கு தொடர்பும் பழக்கமும்கூடத் தேவை இல்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உண்ர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைத் தரும். 786 முகம் மட்டிலும் மலரும் படியாக நட்புக் கொள்வது நல்ல நட்பு ஆகாது. நெஞ்சம் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நல்ல நட்பாகும். 78. நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, அவனை நல்ல வழியில் நிலைபெறச் செய்து, அழிவு நேரிட்ட காலத்தில் தானும் அவனோடு இருந்து துன்பப்படுவதே நல்ல இடங்கும். 8ே, உடை நெகிழ்ந்தவனது கை உடனே உதவி மானத்தைக் காப்பதுபோல நண்பனுக்குத்துன்பம் வந்தால்அப்பொழுதே சென்று துன்பத்தை விரைந்து நீக்குவ்துதான் சிறந்த நட்பு. ; 78. நட்பிற்குச் சிறந்த நிலை எது என்றால் எப்போதும் மனமாறுபாடின்றி இயலும் போதெல்லாம் ఫీ நின்று உதவி செய்து பேனும் நிலையாகும். 78. இவர் எமக்கு இத்தன்மையர், யாம் இவருக்கு இத்தன்மையோம் என்று நட்பின் அளவைப் புனைந்துரைத்தாலும் அந்த நட்பு தன் சிறப்பினை இழந்து விடும்.