பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 164 அதிகாரம் 81 Lങ്ങുങ്ങഥ 80. பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால், அது பழகியவர் உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்து வரும் நல்ல நட்பாகும். 802. நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமையாகும். அப்படிப்பட்ட உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமை. 803 பழகியவர் உரிமையால் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோல் உடன்படாவிட்டால் அவருடன் தாம் நெடுங்காலம் பழ நட்பு என்ன பயனைத் தரும்? 804, தம்மேர்டு கொண்ட நெருக்கமான உரிமை காரணமாக தம்மைக் கேளாமலே நண்பர் சயலைச் செய்து விட்டாலும் அந்த உரிமையைப் போற்றி ரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர். 805 நட்பாகக் கொண்டவர் நாம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால் அதனை அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணர்தல் வேண்டும். 806, உரிம்ை வாழ்வின் எல்லையில் நின்றவர் தமக்கு நேரிட்ட தொல்லைகளின்போது பழைமையாய் உறவு கொண்டு உதவியாய் நின்றவரின் தொடர்பை அவர்கள் தொலைவான் இடங்கட்குப் போனாலும்கூடக் கைவிடார். 80. தொன்று தொட்டு அன்புடன் பொருந்திய நட்பினை யுடையவர்கள் தமிக்கு அழிவு வரக்கூடிய ஒருசெய்லைச்செய்தாலும் அவர்கள்மீது தம் அன்பு நீங்காமலிருப்ப்ர் 808 பழகிய நண்பர் செய்த குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் நட்புரிமை வல்லவர்க்கு அந்நண்பர் தவறு செய்வாரான்ால் அது பயனுள்ள நாளாகும். 809, நட்புரிமை கெடாமல் தொன்றுதொட்டுப் பழகிவந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாத பண்பினரை உலகம் விரும்பிப் போற்றும். 80. தவறு செய்தபோதிலும் பழகிய நண்பரிடத்தில் தம் நட்புரிமைப் பண்பிலிருந்து மாறாதவ்ர் தம் பல்க்வராலும் விரும்பப்படுவதற்குரிய சிறப்பினை அடைவர்.