பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 168 அதிகாரம் 82 يُمكسات في 81. அன்பு மிகுதியால் தம்மை அள்ளிப் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நன்று. 82. தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்தும் பயன் ఉష్ణోఃఖీ ஒத்ததன்மை இல்லாதவரின் நட்பைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்றுதான். - - - - 33. டிக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் கொடுப்பாரைக் கொள்ளது பெறுகின்ற பொருளைக் கொள்ளும் பொதுமகளிரும், நம் பொருளைக் கவரும் கள்வரும் ஒரு தன்மையினர். 81. போர் வந்துள்ளபோது கனத்தில் தள்ளிவிட்டு ஓடிவிடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் நட்பைவிட ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே மிகவும் சிறந்தது. 85. காவல் செய்து வைத்தாலும் பாதுகாப்பிற்கு ஆகாத கீழ்மக்களது தீய நட்பைப்பெறுவதைவிட அத்னைப்பெறாமலிருப் பதே சிறந்து 88. அறிவற்றவரின் மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பின்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். 87. அகத்தில் அன்பற்று புறத்தில் நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாகும். 88. நம்மால் செய்து முடிக்கக்கூடிய செயலையும் முடியாத வண்ணம் செய்து கெடுப்பவரின் நட்பு உறவை அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிடவேண்டும். 89. தாம் செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு நனவில் மட்டுமின்றிக் கனவிலும் துன்பம் தருவதாகும். 80. தனியே இல்லத்தில் உள்ளபோது நட்புரிமை பேசிப் பலர் கூடியுள்ள பொதுமன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் நம்மை அணுகாமல் காத்தல் வேண்டும்.