பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 2 அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து 1. எழுத்துகள் எல்லாம் அகர ஒலியை முதலாகக் கொண்டவை. அதுபோல் உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதல்வனாகக் கொண்டவை. 2. துய அறிவு வடிவான இறைவனின் திருவடிகளைத் தொழாதவருக்கு அவர் கற்ற கல்வியினால் உண்டாகும் பயன் ஒன்றும் இல்லை. 3. அன்பரின் நெஞ்சமாகிய இதயத்தாமரையில் வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களே இன்ப உலகில் நிலையாக வாழ்வார்கள். 4. விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளுக்கு எப்பொழுதும் எவ்விடத்தும் துன்பம் இல்லை. - 5. இறைவனின் உண்மை சேர்ந்த புகழை விரும்பி அன்பு செலுத்தினவர்களிடம் அறியாமையால் விளையும் நல்வினை தீவினை ஆகிய இருவகை வினைகளும் வந்து சேரா, 5. ஐம்பொறி வாயிலாக எழுகின்ற ஆசைகளை ஒழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவரே நிலைபெற்ற வாழ்வினர் ஆவர். 7. தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனின் திருவடிகளைப் பொருந்திநினைக்கின்றவர்களுக்கு அன்றிப் பிறர்க்கு மனக்கவலை மாற்றுதல் அரிதாகும். 8. அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்கட்கு அல்லாமல் பிறர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய மற்றக் கடல்களைக் கடத்தல் அரிது. 9. கேட்காத செவியும், காணாத கண்ணும் போல எண்வகைக் குணங்களின் உருவான இறைவனின் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. - 10. இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பர் சேராதவர்களால் கடக்க இயலாது.