பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 180 அதிகாரம் 89 உட்பகை 88 நிழலும் நீரும் நுகருங்காலத்தில் இன்பம்தருவனவாயினும், பின்னர் நோய் செய்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் செய்யின் தீயனவாகும். 882 வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவினரைப்போல் இருந்து அன்பு காட்டி உள்ளத்தில் பல்க மறைத்து நிற்பவருக்கே அஞ்சவேண்டும். 883 உட்பகையாக இருப்பவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்கனம் காவாக்கர்ல், தனக்குத் தளர்ச்சி வந்துற்றபோது மட்கலத்தை அறுக்கும் கருவிடேல் அந்த உட்பன்க் தவறிமேல் அழிவு செய்யும். 884, உள்ளத்தில் திருந்தாத பகை_ஒருவருக்கு உண்டானால், அவர் அதனை அப்போதே ஒழிக்க வ்ேண்டும் இல்லையானால் அது கற்றம் சீர்படாமைக்குக்க்ாரணமான குற்றம் பலவற்றையும் தரும். ரு 885. உறவு முறைத் தன்மையோடு பழகுவோரிடம் உட்பகை தோன்றினால்,அஃது ஒருவருக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும். 888, ஒருவருடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால் 蠶 உட்ப்ஸ்கயால் அவன் அழியாதிருத்தல் என்பது எக்காலத்திலும் அர்தாகும். 影 செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பெருந்தியிருப் பினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள்.அகத்திேபொருந்தி யிருக்க மாட்டார்கள். 88. முன்உயர்ந்து வளர்ந்ததேயாயினும்,உட்பகை உண்டானகுடி அரத்தினில் அவப்பட்ட இரும்பைப்போல் வலிமை குறைக்கப் பட்டு நாளுக்குநாள் தேய்ந்து அழிந்து போகும். 889. င္ဆိုႏိုင္တူ உட்பதை அவரது பெருமையை நோக்க எள்ளின் பிள்வைப்போல் சிறிதானது என்றிலும், அதனல் அவன் பெருமையெல்லாம் பிற்காலத்தில் கெட்டழியும். 890. மனம் பொருந்தாதவரோடு ஒருவன் கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ள்ே பர்ம்போடு தங்கியிருந்து வாழ்வதைப் போன்றது.