பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 182 அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை 89. மேற்கொண்ட செயல்களைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றல்களை இகழாதிருத்தல், காப்பவர் தமக்குத் தீங்குவராமல் செய்து கொள்ளும் காவல்கள் எல்லாவற்றிலும் சிறந்தது. 982 ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால் அஃது அப்பெரியாரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களைத் தந்து விடும். 893, ஒருவன் தான் கெட்டுப்போக விரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க தன்னைக் கொன்று கொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்தாலே போதும், 894 ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீங்கி ழைத்தல், தானாக வரும் கூற்றுவனைக் கைகாட்டி அழைத்தலைப் போன்றது. 895, மிக்க வலிமையுடைய அரசனுடைய பகைக்கு உள்ளனவர் அவனிடமிருந்து தப்புவதற்காக எங்குச் சென்றாலும் எங்கும் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. 86. தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழமுடியும். ஆற்றல் மிகுந்த பெரியோரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது. 89. தகுதியால் சிறப்பெய்திய பெரியார் ஒருவ்னை வெகுண்டால் பல வகையாலும் சிறப்புற்ற அவனுடைய வாழ்க்கையும் பெரும் பொருளும் அழிந்து விடும். 898 குன்றுபோலத் தவ நெறியால் உயர்ந்தவர்கள் கெட வேண்டும் என்று நினைப்பார்களாயின், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிந்துபடுவர். 899, உயர்ந்த விரத வாழ்க்கை கொண்டவர்கள் சீற்றம் கொண்டில், நாட்டை ஆளும் அரசனும் இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெட்டழில்ான். 90. மிகச்சிறப்பாக அமைந்த பெருமையுடையவர்கள் சினம் கொள்வாரானால், மிகப் பெரிய சார்புகள் உடையவரானாலும் உய்தல் முடியாது. அப்போதே அழிந்து படுவர்.