பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 186 அதிகாரம் 92 வரைவின் மகளிர் 91. அன்பால் விரும்பாமல் ஒருவன் தருகின்ற பாருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனியசொல், ஒருவனுக்குத் துன்பத்தையே கொடுக்கும். 92. ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து அதனை அடையும்வரை பண்பைப்பற்றிப் பேசும் பண்பற்ற பொதுமகளின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட்டுவிட வேண்டும். 913. கொடுக்கும் பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல் பினம் எடுப்பார் இருட்டறையில் தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவுவதைப் போன்றது. 914, இன்பமாகிய பெருளை இகழ்ந்து பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை அருளோடு கூடிய சிறந்த பொருளை ஆர்ாயும் அறிவுடையோர் பெருந்தார். 95 இயற்கைான மதிநலத்தால் மாட்சிமைப் பட்ட அறிவுடையோர் பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் இழிவான நலத்தைத் தீண்டார். 95. அழகு முதலியவற்றால் செருக்கடைந்து தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளினைத் தம் புகழைக் கருதும் உயர்ந்தோர் தீண்டமாட்டார். - 9?, நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில்வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோள்களைப் பொருந்துவர். - - 98. வஞ்சித்தலில் வல்ல பொதுமகளிரின் முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவில்லாதவர்க்கு அணங்குதாக்கு மோகினி மியக்கு என்ப்ர் அறிஞர். 99. உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும் விலை தந்தால் தழுவுகின்ற பொதுமகளிரது மெல்லிய தோள்கள் உயர் வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகமாகும். - 920 இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் குதுமாகிய இம்மூன்று தொடர்புகளும் திருமகளால் கைவிடப்பெற்றவரின் நெருங்கிய உறவாகும்.