பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 206 அதிகாரம் 102 நானுடைமை 101. இழிந்த செயல் காரணமாக நானுதலே நன் மக்களது நாணம் மன்ம் மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் பிற நாணங்கள் குலமகளிருக்குரியவை. 102. உணவும் உடையும்,எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்கட்கும் பொதுவானவை. ஆயினும், நன்மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நானுடைமையே யாகும். 103. உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான ஊனாலான உடம்பை ஒருபோதும் விடமாட்டா அவ்வாறே நாணம் என்னும் நற்குணத்தை இருப்பிடமாகக்கொண்டசால்பு அதனை ஒருபோதும் விட்டுவிடாது. 104. நாணம் உடைமை சான்றோர்க்கு ஓர் அணிகலம் ஆகும். அந்த அணி இல்லையாயின் அவரது பெருமிதநடை காண்போருக்கு ஒரு நோயாகிவிடும். 105. பிறருக்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் சமமாக மதித்து நாணுபவன் நாணத்திற்கு உறைவிட்மானவர் இவர் என்று உலகம் சிறப்பித்துக் கூறும். 106. நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல்.மேலோர் அகன்ற இவ்வுலகில் வாழும் வாழ்க்கைய்ை விரும்பி மேற்கொள்ளார். 101. நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர் நாணத் தால் உயிரை விடுவர் உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடார். . . 1818, கேட்டவரும் கண்டவரும் நாணத்தக்க பழியை ஒருவன் நானாது செய்தால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மை யுடையதாகும். 109.ஒருவனது ஒழுக்கம்.தவறினால் அவனது குடிப் பெருமை ஒன்றே கெடும் நாணில்லாத தன்மை நிலைபெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும். 1020. மனத்தில் நாணமில்லாத மக்கள் உயிருடையார்போல் இயங்குதல்,மரத்தால் இயன்ற பாவையைக் கயிறுகொண்டு ஆட்டி உயிருள்ளதாகத் தோன்றுமாறு மயக்கினாற் போன்றது.