பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 2:8 அதிகாரம் 108 &tiఙ}{2} 101. வடிவமைப்பால் கயவர் மக்களைப் போன்று இருப்பர் அவரைப்போல ஒப்புமையான ஒன்றை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. t2தமக்கு உறுதியானவை இவை என்று அறிந்தவரைவிடக் கயவரே நல்லபேறு உடையவர்: ஏன் என்றால், அவர்போல இவர் தம் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை இல்லாதவர். - 103. கயவரும் தேவரைப்போல தாம் விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடத்தலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர். 104. கீழ்ம்க்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவரை விட மேம்பட்டிருப்பதைக் கட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர். 105.'அரசால் ஏதம் வரும் என்னும் அச்சமும் கீழ் மக்களது ஆசாரத்துக்குக் காரணம். அஃது ஒழிந்தால், விரும்பப் படும் பொருள் வரும்போது அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும். 106. கயவர் தாம் கேட்டறிந்த மறை பொருளைப் பிறருக்கு வலியக் கொண்டுபோய்ச் சொல்லுவதால், அவர்கள் செய்தி அறிவிக்க அறையப்படும் பறைபோன்றவர்கள் ஆவர். 107. கயவர் தம் கன்னத்தை நெரித்து உடைக்கும்படி வளைந்த கையினர் அல்லாத மற்றவருக்குத் தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும்கூட உதறமாட்டார்கள். 108. அணுகிக் குறையைச் சொன்னதும் சான்றோர் இரக்கங் கொண்டு உதவுதற்குப் பயன்படுவர் கரும்புபோல் வலியவர் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் அவருக்குப் பயன்படுவர். 109. கீழ் மகன் பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கண்டால், அவர்மேல் பொறாமை கொண்டு வேண்டும் என்றே வடு உண்டாக்கவும் முயல்வன். 1080. ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகக் கயவர் தம்மை விரைவில் பிறருக்கு விலையாக விற்பதற்கு உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிற்கும் உரியவராகார்.