பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவ மாலை பொருக்கு மணிகள் பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால். (13) - அரிசிற்கிழார் ஆயிரத்து முந்நூற்று முப்பு தருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூல்உேைவா மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். (16) - நத்தத்தனார் ஒதற் கெளிதாய் உணர்தற் களிதாகி வேதப் பொருளால் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொ றுள்ளுதொறுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. (24) - மாங்குடி மருதனார் எல்லாப் பொருளும் இதன்பால் உளவிதன்யால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார் சுரந்தபா வையத் துணை. (29) - மதுரைத் தமிழ் நாகனார் மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும் தாய்முலை ஒண்டால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு, (31) - உருத்திரசன்ம கண்னர்