பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 224 அதிகாரம் 10 குறிப்பறிதல் 19. இவளுடைய மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன. ஒன்று என்னிடத்து நோய் செய்யும் பார்வை, மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை, 1992 கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற இவளது அருகிய சிறுபார்வை காமத்தின் சரிபாதி அன்று. அதனினும் மிகுதியானதாகும். 1993 அன்டோடு என்னை நோக்கினாள் யான் கண்டதும் நோக்கித் தலை குனிந்தாள். அக்குறிப்பு அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும். 1094, யான் அவளை நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள் யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்ந்து புன்முறுவல் விளைவிப்பாள். 1095 என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே யன்றி, ஒருகண்ணைச் சுருக்கினவள்போல் என்னை நோக்கித் தனக்குள் மகிழ்வாள் 1996, புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகை இல்லாதவரின் சொல் என்பது விரைவில் உணரப்படும். 108. பகை கொள்ளாத போலிக் கடுஞ்சொல்லும் பகைவர் போலப் பார்க்கும் சினந்த பார்வையும், புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும். 1998. அவளை இரப்பது போல யான் நோக்கும்போது அதனால் நெகிழ்ந்தவனாய் மெல்லச் சிரிப்பாள்; அதனால் அசையும் இயல்புடையவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது. 1999, புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தலும், அகத்தே காதல் கொண்டவரிடம் காணப்படும் ஒர் இயல்பாகும். 10. இருவர் கண் இணைகளும் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால், அதற்குமேல் வாய்ச்சொற்களால் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.