பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 226 அதிகாரம் t: புணர்ச்சி மகிழ்தல் 101 கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தீண்டியும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் மட்டிலுமே உள்ளன. 102. நோய்க்கு மருந்தாவள நோயல்லாத பிற பொருள்களாக உள்ளன, அணிகலன்கள் புனைந்த இவளால் உண்டான நோய்க்கு இவளே மருந்தாக அமைகின்றாள். - 13. தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோன்களில் துயிலும்இன்பத்தைப் போலத் திருமால் உலகமாகியவைகுந்தத்தில் பெறும் இன்பமும் இனிதாக இருக்குமா? 104. விட்டுப் பிரிந்தால் கடுகின்றது. கிட்ட நெருங்கினால் குளிர்ச்சியாக உள்ளது. இத்தகைய புதுமையான நெருப்பை இவள் யாண்டுப் பெற்றாளோ? 105. மலரணிந்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பியபொழுது விரும்பப்பட்ட பொருள்கள் வந்து இன்பம் விளைவித்தல்போலவே இன்பம் தருகின்றன. 106. இம்மங்கையின் தோள்களை நான் தீண்டும்போதெல்லாம் என் உயிர் தளிர்ப்பதால் இவளுடைய தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப் பெறிருத்தல் வேண்டும். 107. தம் செந்த இல்லத்திலிருந்து தாம் ஈட்டிய பொருள் களைப் பகுத்துண்டால் பெறும் இன்பத்தைப் போன்றது. இம் மங்கையைத் தழுவுவதால் அடையும் இன்பம் 18. காற்றும் இடையிலே புகுந்து பிளந்து செல்லாதபடி இறுக்கமாகத் தழுவுதல், ஒருவரையொருவர் விரும்பிக் கூடும் காதலர் இருவருக்கும் இனிமை தருவதாகும். 109. ஐடலும்,அதனை அளவோடு உணர்ந்து தெளிவித்தலும், அதன்பின் கூடுதலும் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் அடையும் பயன்களாகும். 10. நூற்பொருள்களை அறியும்தோறும் முன்னைய அறியாமையைக் காண்பதும் போல செந்நிற அணிகளை உடையவளிடம் சேரும்தோறும் காதல் இன்பம் உண்டாகின்றது.