பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 230 அதிகாரம் 13 காதற்சிறப்புரைத்தல் 12. மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளது வெள்ளிய பற்களிடையே ஊறிய நீர் பலோடு தேன் கல்ந்தற் போன்ற மிகுந்த சுவையினை யுடையதாகும். 12. இம்மடந்தையோடு எம்மிடத்து உண்டான உறவுமுறை, உடம்போடு உயிருக்கு இடையேயுள்ள தொடர்பு போன்றதாகும். 123 எனது கண்ணின் கருமணியிலுள்ள பாவையே. நீ அவ்விடத்தை விட்டு நீங்கிவிடுவாயாக் ஏனெனில், யான் விரும்புகின்ற அழகிய நெற்றியையுடைய. இவளுக்கு என் கண்ணில் இருக்க வேறு இடம் இல்லையே! 124 ஆராய்ந்த அணிகலன்களையுடைய இவள் என்னுடன் இருக்கும்ப்ோது என் உயிருக்கு வாழ்வு போன்றவள் பிரியும் போது அவ்வுயிருக்குச் சாதலையொத்தவள். 125 ஒள்ளியவாய்ப் போர் புரிகின்ற கண்களையுடைய இவளது பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும். ஆனால் அதனை எப்போதும் மறந்ததில்லையே! 126 எம் காதலர் எம் க்ண்ணுள்ளிருந்து ஒருபோதும் நீங்கர் எம் கண்களை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தார். அவர் அவ்வளவு நுட்பமானவர். 12. எம் காதலர் எம் கண்ணினுள் இருக்கின்றார்; ஆகை யால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம் 128.எம் காதலர் எம் நெஞ்சினுள் உறைகின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி அதனை உண்ணுவதற்கும் அஞ்சுகின்றோம். 129. கண் இமைத்தால் கண்ணுள் இருக்கும் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன். அல்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பற்றவர் என்கின்றனரே! 13. காதலர் எம் உள்ளத்துள்ளே மகிழ்ந்து உறைகின்றார்: அப்படி இருந்தும் அவர் பிரிந்து போய்விட்டார். அதனால் அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிக்கின்றனரே