பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 23; அதிகாரம் 15 அலர் அறிவுறுத்தல் 14. எங்கள் தொடர்புைப்பற்றி ஊரில் பழிச்சொல் எழுந்தும் என் அரிய உயிர் இன்னும் நீங்காது நிற்கின்றது. அஃது என் நல் வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறியாமல் உள்ளனர். 12. குவளைமலரைப் போன்ற கண்களையுடைய இவளின் அருமை அறியாமல், இந்த ஊரார் இவளை எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். 13. ஊரார் எல்லாருமே அறிந்த இந்தப் பழிச் சொல் நமக்குப் பொருந்தாதோ? பொருந்துமாதலால் இந்த அலர் பெற முடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக உள்ளது. 144, எம் காமம் ஊரார் கூறுகின்ற தூற்றலால் வளர்ந்து வருகின்றது. அந்தத் தூற்றல் இல்லையானால் அஃது இன்பம் தருதலை இழந்து சுருங்கிப் போகும். 1145 களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற்போல, காமமும் அலரால் வெளிப்பட வெளிப்பட § `ಿ...? 1146. காதலரைக் கண்டது ஒருநாள்தான். அதனால் எழுந்த துற்றுதலோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி எங்கும் பரவினாற்போல எங்கும் நன்றாகப் பரவி விட்டதே. 11. இந்தக் காமநோய் ஊராரின் பழிச் சொற்களை ஒருவாகவும் அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ் சொல்லே நீர்கவும் கொண்டு செழித்து வளர்கின்றது. 148 பழிச் சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. 19.அஞ்சற்க என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நானும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணவும் நம்மால் இயலுமோ? 15). யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்து மொழிகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதற்கு உடன் போக்கிற்கு உடன்படுவர்.