பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 238 அதிகாரம் 16 பிரிவாற்றாமை 15. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்லுக பிரிந்து சென்று விரைவில் திரும்பிவருவது பற்றியாணில் அது வ்ரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்லுக. 152 அவருடைய அன்பான பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது. இப்பொழுதே பிரிவை நினைத்து அஞ்சு கின்ற துன்பத்தால் அவருடைய கூட்டமும் துன்பமாகத் தோன்று கின்றது. 鑒 அறிவுடைய காதலரிடத்தும் ஒவ்வொரு சமயம் பிரிவு உள்ளபடியால் அவர் பிரியேன் என்று சொன்ன சொல்லும் நம்பித் தெளிவது அரிதாயுள்ளது. 15. அருள் செய்த காலத்தில் அஞ்சற்க என்று கூறித் தேற்றியவர் இப்போது பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்த நமக்குக் குற்றம் உண்டோ? 15. காத்துக் கொள்வதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காக்க வேண்டும் அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் அவ்ர்க் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும். 158. பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல்நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் மீண்டும் வந்து நமக்கு இன்பம் நல்குவார் என்னும் நம் ஆசையும் பயனற்றது. 15 என் மெலிவால் முன்கையில் கழன்று நின்ற வளையல் கள் தலைவன் என்னைவிட்டுப் பிரிந்த செய்தியை ஊரறிய எடுத்துக் காட்டித் துற்றமாட்டாவோ? 158.தோழியர் எவருமே இல்லாத ஊரில் வாழ்தல்துன்பமானது. இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது அதைவிட மிகவும் துன்பமானது. 159, நெருப்பு தன்னைக் தொட்டால் சுடுவதல்லாமல் காம நோயைப் போலத் தன்னை விட்டு அகன்ற பொழுதும் கடவல்ல தாகுமோ? 150 பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு, பிரியும்போது உண்டாகும் துயரையும் தாங்கி பிரிந்தபின் பொறுத்திருந்து, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்: