பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 244 அதிகாரம் 120 - தனிப்படர் மிகுதி 19. தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறுபெற்ற மகளிர் காதல் வாழ்க்கையின் பயனாகிய விதையற்ற கனியைப் பெற்றவரே ஆவர். 192, தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பதைப் போன்றது. - 193. காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் பிரிவுத் துன்பம் இருந்தாலும் மீண்டும் வந்தபின் இன்பமாக வாழ்வோம் என்னும் செருக்கு ஏற்றதாகும். 194. தாம் விரும்பும் காதலரால் விரும்பப் படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர். 195. தாம் காதல் கொண்டவர் தாமும் அவ்வாறே தம்மிடம் காதல் கொள்ளாவிட்டால், தமக்கு அவர் என்ன நன்மை செய்வார்? 196 காதல் ஒருபக்கமாக இருத்தல் மிகவும் துன்பம் தருவது காவடித் தண்டின் சுமைபோல இருபக்கமாகவும் ஒத்திருப்பது மிகவும் இன்பம் தருவதாகும். 197 காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல் ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால் என் துன்பத்தையும் வருத்தத்தையும் அவன் அறியமாட்டானே? 198. தாம் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து வாழ்கின்ற மகளிரைப் போல் வன்கண்மை உடையவர்கள் இல்லை. 199, யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக உள்ளது. 20. நெஞ்சமே, நீ வாழ்க நின்னிடம் அன்பற்றவரிடம் நின் மிகுந்த துன்பத்தை உரைக்கின்றாய் அதனைவிட்டு எளிதாகக் காமக்கடலைத் துர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக!